2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை, 80 வயது வரை நீடிக்க அரசமைப்பு பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசமைப்பு பேரவை நேற்று (25), கூடிய போதே, இத்தகைய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுவில் வெற்றிடம் நிலவுவதனால், சேவைக்காலத்தை நிறைவுச் செய்திருப்பவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதன்மூலம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறியினும் இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் ​மேற்கொள்ளவுள்ளதாக, அரசமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .