2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

Editorial   / 2024 மே 30 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

சுழிபுரம் திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து  கைவிடப்பட்டது.

சுழிபுரம் காட்டு புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவை திணைக்களம், கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுபுலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுதப்பட்டனர். இந்நிலையில் தாம் திரும்பி செல்வது தொடர்பில்  மேலதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 இதனையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலதிகாரியுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் எதிர்ப்பினை தெரிவித்தார். இந்நிலையில் மேலதிகாரியினால் மீள வரும்படியாக உத்தரவிடப்பட்டது. 

உரிமையாளர்களின் எதிர்ப்பு கடிதம்   சட்டத்தரணி சுகாசினால் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு நில அளவை திணைக்களத்தினர் அகன்று சென்றனர்.

இதன் பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X