2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

செல்பி எடுக்க முயன்று பலியானவர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயன்று, பண்டாரவல – பம்பரகம நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (25) குறித்த நீர்வீழ்ச்சிக்கு குழுவாக வருகைதந்திருந்த வேளையில்,  இளைஞர்கள் மூவர் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்த வேளையில், அதில் இருவர் கால் வழுக்கி கீழே விழுந்துள்ள நிலையில், அவர்களது சடலங்கள் கடற்படையினரால் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 20 மற்றும் 21 வயது​களையுடையவர்களென்றும், கெப்பட்டிபொல – திவுரும்வல மற்றும் ஹீல்ஓயா – உடஅராவ பகுதியை சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .