2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’சோன்னே’ ஆராய்ச்சிக் கப்பலுக்கும் தடை

Simrith   / 2024 மார்ச் 21 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஓராண்டு தடை விதித்துள்ள நிலையில், ஜேர்மன் கப்பலான 'சோன்னே' கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது கொழும்பு துறைமுகத்தில் மீள்நிரப்ப அனுமதிக்கப்படும் என டெய்லி மிரர் அறிந்து கொள்கிறது.

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் அதன் சுற்றுப்புறத்தில் நங்கூரமிடுவதைப் பற்றிய இந்தியாவின் கவலைகளுக்கு மத்தியில், வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் அதன் கடற்பரப்பில் நுழைவதற்கு இலங்கை அரசு ஒரு வருடத்திற்கு தடை விதித்துள்ளது. 

மற்றொரு ஆராய்ச்சிக் கப்பலை அனுப்ப சீனா அனுமதி கேட்டதையடுத்து இத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த முடிவு இந்தியாவில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிப்பதாக கருதப்படுகிறது.

சீன ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 கடந்த ஒக்டோபரில் பல நாட்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது, அதே நேரத்தில் 2022 இல் கடற்படைக் கப்பல் யுவான் வாங் 5 தென் இலங்கையின் அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது. 

மேலும், ஜனவரி 5, 2024 முதல் தென் இந்தியப் பெருங்கடலில் "ஆழமான நீர் ஆய்வு" நடத்த சீனா தனது அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3க்கு அனுமதி கோரியது. புதிய விதிமுறைகளுக்கு இணங்க அரசாங்கம் அதை அனுமதிக்கவில்லை. பின்னர் சீனா தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், இலங்கை புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன்பே ஜேர்மனி தனது கப்பலுக்கு அனுமதி கோரியது. இப்போது தடை அமலில் உள்ளது, மேலும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை அரசாங்கம் தடை செய்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X