Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோளப் பயிர்ச்செய்கை, ஏனைய சில பயிர்களுக்கு அச்சுறுத்தலாய் அமைந்த படைப்புழுவின் தாக்கம், வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள விவசாய, கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,கடற்றொழில் அமைச்சர் பி. ஹரிசன் சோளப் பயிர்ச் செய்கையை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (11) இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
இந்தப் படைப்புழுவை 100 சதவீதம் முற்றாக அழிக்கவில்லை என்ற போதிலும் படைப்புழுவால் அண்மைக் காலங்களில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து இதனைக் கட்டுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரசாயன பதார்த்தங்கள், தேசிய வைத்தியர்களின் ஆலோசனைகள், விவசாயிகளின் பாரம்பரிய முறைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படைப்புழுவைக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்ததுடன்,எதிர்காலத்திலும் இவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உலக சந்தையில் பெரிய வெங்காயத்துக்கு கிடைக்கும் விலை எமது விவசாயிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பெரிய வெங்காய இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சோள இறக்குமதிக்கு முற்றாக தடை விதித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கு விசேட வரிகள் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago
04 Jul 2025