2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜேர்மன் பெண்ணும், பாதுகாப்பு அதிகாரியும் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஜேர்மன் நாட்டுப்பெண்ணும், பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் அவ்விருவரையும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜேர்மன் நாட்டு பெண்ணொருவர் (வயது 29), நுழைவுப்பத்திரமின்றி, அநுராதபுரம் அபயகிரி நூதனசாலையை பார்வையிடுவதற்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கும், அப்பெண்ணுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கத்தையடுத்து பாதுகாப்பு அதிகாரி, தன்னை தாக்கியதாக அந்த வெளிநாட்டுப்பெண், அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளை நடத்திய பொலிஸார், இவ்விருவரையுமே கைதுசெய்து, பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X