2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 24 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மகனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக சிவராஜா ஜெனீவனின் பெற்றோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தங்களுடைய நன்றியைத் தெரிவித்து கொண்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது, தற்கொலைத் தாக்குதல் நடத்தி அவரை, கொலை செய்வதற்கு முயன்ற குற்றஞ்சாட்டப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையிலேயே, சிவராஜா ஜெனிபர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், புதுக்குடியிருப்புபிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹைட்ராமணி ஆடைத்தொழிற்சாலையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி, அங்கு நேற்று வந்திருந்தபோது, அங்குவந்த அவருடைய பெற்றோர். தன்னுடைய மகனுக்கு மன்னிப்பு வழங்கியமைக்கதாக தாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X