Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று வெள்ளிக்கிழமை (25) நத்தார் பண்டிகையை கொண்டாடும் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அன்பையும் அறத்தையும் குறிக்கும் பிறப்பு
நத்தார் பண்டிகை, இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும், ஒரு பலமான குரலைக்கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசு பாலகர், செம்மறி ஆடுகளுக்கு மத்தியில் ஒரு தொழுவத்தில் பிறந்து, இடையர்கள் அவருக்கு முதல் முதல் காணிக்கை செலுத்தியதிலிருந்து மனிதாபிமானம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு மற்றும் பணிவு பற்றிய கிறிஸ்தவச் செய்தியை கண்டுகொள்ளமுடியும்.
இயேசுவின் தத்துவம் நித்தியமானதும் பிரபஞ்சம் தழுவியதுமாகும். ஒருவரது நம்பிக்கைக்குப் புறம்பாக, நாம் எல்லோரும் எமக்கும் ஒருவர் மற்றவருக்கும் இந்த உலகில் உண்மையானதும், நீடித்ததுமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு கடமை உணர்வைக் கொண்டுள்ளோம்.
நத்தார், உணர்வையும் அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களை மனதிற்கொண்டு, இலங்கையில் முப்பது வருடகால போரின்போது பாதிக்கப்பட்ட மக்களை நாடிச்சென்று, அவர்களது வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்ற கைக்கொடுப்போம்.
இயேசுவின் பிறப்பு, அவர் இந்த உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு பற்றிய புதிய போதனைகளுடன், மானிட விடுதலைக்கான வழியைக்காட்டுகிறது. நத்தார் மணி எழுப்பும் நாத ஓசையும் பண்டிகைத் திருப்பாடல் ஒலிகளும் இப்பண்டிகையையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், குறித்து நிற்கிறது.
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த எனது நத்தார் வாழ்த்துக்கள்.
மனிதத்துவத்தின் ஐக்கியத்தை உணர்த்தும் பிறப்பு
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றின் மூலம் தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவம் ஐக்கியப்படும் முறையை, முழு உலகுக்கும் கற்றுக் கொடுத்த கர்த்தரின் பிறப்பைக் கொண்டாடும் மகிமை மிக்க நிகழ்வு நத்தார் பண்டிகை ஆகும்.
விடுதலையின் பாதையை கற்றுத்; தருவதற்கு, அன்பின் வாழ்க்கையை விளக்கித் தருவதற்கு, மனிதராகப் பிறந்த தேவ புத்திரரின் பிறப்பை மிகவும் விமர்சையாகக் கொண்டாடும் நாம், அவருடைய வாழ்வு முன்மாதிரி மூலம் எமது வாழ்வையும் கட்டியெழுப்ப முயற்சியெடுக்க வேண்டும்.
தற்கால சமூகம் வேண்டி நிற்பதும் இன, மத பேதத்தினைக் கருத்திற் கொள்ளாத சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த தெய்வீகத்;தன்மை மற்றும் மனிதத்துவத்துடன் கைக்கோர்த்த, நற்பண்புகள் மிகுந்த ஒரு சூழலையாகும். சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி நிலைநாட்டப்படும் சிறந்த ஒரு தேசத்துக்காகவாகும். அதற்காக ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமையாகும். இயேசுநாதரின் பிறப்பு இடம்பெற்ற நத்தார் தினத்தைக் கொண்டாடும் எம் அனைவருக்கும் அப்போதுதான் நத்தாரை அர்த்தபூர்வமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.
உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான, அர்த்தபூர்வமான நத்தார் தினமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago