Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 13 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி, அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காட்டிய சாதகமான மனப்பாங்கு இந்திய அரசாங்கத்தின் விசேட அவதானத்தைப் பெற்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் நட்புறவு பற்றி இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது இந்திய விஜயம், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஆகியவற்றினூடாக இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு மாத்திரமன்றி அதற்கு அப்பாற்பட்ட நட்புறவு கட்டியெழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமிடையே இருதரப்பு கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் மாதத்தில் இந்தய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், அதன்போது இருநாடுகளுக்குமிடையே இருதரப்பு கலந்துரையாடல்களை மேலும் முன்கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்திய அரசு வழங்கும் ஒத்துழைப்புபற்றி நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி, புனர்வாழ்வு மற்றும் மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளிலும் மின்சாரம், ரயில்;பாதை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் விசேடமாக பலாலி விமான நிலையம் மற்றும், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்துவதற்காக இந்திய அரசு வழங்கும் உதவிகள் தொடர்பாகவும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே எதிர்காலத்தில் உருவாகவுள்ள கலந்துரையாடல்கள் மூலம் இருதரப்பு உறவுகள் வலுவடைதல் மாத்திரமன்றி, சிலபோது ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை சீர்செய்வதற்கும் பயனுள்ளதாக அமையுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.
இத்தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
5 minute ago
6 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
8 minute ago
1 hours ago