2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி இன்று வடக்குக்கு விஜயம்

Freelancer   / 2024 மே 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று வடக்குக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

3 நாட்கள் விஜயமாக வடக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்றும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X