2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டது

Editorial   / 2024 மே 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடி நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அணிவிக்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் நிஷாந்த மானகேவினால் படைவீரர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் மே மாதம் ‘படைவீரர் நினைவு மாதமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குரூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், ஏராளமான முப்படைகளின் இராணுவ வீரர்கள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததுடன், பெருமளவு இராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் வாரத்தில் முப்படைகளின் தளபதி கௌரவ ஜனாதிபதிக்கு தேசிய படைவீரர் கொடி அணிவிப்பதன் மூலம் படைவீரர்களின் மாதம் ஆரம்பமாகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X