2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியுடன் பேச பேராசிரியர்கள் ஆர்வம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உர நெருக்கடி தொடர்பில் சரியான கருத்துக்களையும் வேலைத்திட்டத்தையும் முன்வைக்க பல்கலைக்கழகங்களின் விவசாய பீடங்களைச் சேர்ந்த 141 பேராசிரியர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை கோரியுள்ளனர்.

விவசாயத் துறையில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்  பசுமையான விவசாயத்தை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப செயற்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்தை அரசாங்கத்துக்கு முன்மொழியவும் தாம் தயாராக இருப்பதாகவும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க முதலிகேவுக்கு கடிதம் அனுப்பி இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளனர்.

பணம் செலுத்துபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கான முன்மொழிவுகளை முன்வைக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .