2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜனவரி முதலாம் வாரம் நல்லாட்சி வாரம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, அனைத்து மக்களும் அந்தவாரம் முழுவதும், தேசியக் கொடியை பறக்க விடுமாறும் கோரியுள்ளார்.

நல்லாட்சி அரசு ஆட்சிபீடமேறி ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சிக்கான வாரத்தில் ஆடம்பரமான ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான செயற்றிட்டங்களை மேற்கொள்ளுமாறு அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு, நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு வழங்கும் நோக்கில், நாட்டின் தேசியக் கொடியை பறக்க விடுமாறும் நாம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

பொது எதிரணி உறுப்பினர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், தற்போது நாட்டில் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

அவ்வாறானவர்கள் இந்தியாவை எதிர்த்தும், தமிழர்- சிங்களவர்களை எதிர்த்தும், புலிக்கதையைப் புனைந்தும் நாட்டில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்துவதற்கே முயற்சி செய்கின்றனர்.

ஆனால், நாம் இவற்றையெல்லாம் பார்த்து  அச்சம் கொள்ளவோ அல்லது எமது நல்லாட்சிப் பயணத்தை இடைநிறுத்தவோ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X