2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம்

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் இதுவரை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், 146 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சாட்சி பதிவுக்காக இன்றும் 03 பேர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலின்போது தெமட்டகொடை மாடிக்குடியிருப்பில் பணியாற்றிய பெண் காவலாளி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஆகியோரே சாட்சி பதிவுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .