Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதன்முறையாக வழங்கப்படும் ஜனாதிபதி ஊடக விருது விழா - 2018, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் இணையத்தளம் ஊடாக, 2017ஆம் ஆண்டு ஆற்றுகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைகளுக்கு 50 விருதுகள், இதன்போது வழங்கப்படவுள்ளன. அத்துடன், வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுகள் நான்கும் வழங்கப்படவுள்ளன.
வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், பத்திரிகைத் துறையில் பேராசிரியர் எட்வின் ஆரியதாஸ, வானொலித்துறையில் கருணாரத்ன அமசிங்ஹ, தொலைக்காட்சிப் பிரிவில் லூசியன் புளத்சிங்ஹல, இணையத்தளத்தில் லக்ஷ்மன் ஜயவர்தன ஆகியோருக்கே வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
6 hours ago
6 hours ago