2025 மே 12, திங்கட்கிழமை

ஜனாதிபதி செயலகத்தில் வெசாக் நிகழ்வுகள்

S.Renuka   / 2025 மே 12 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு (2025) வெசாக் தினத்தில்  ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று திங்கட்கிழமை (12) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும். 

இந்த பக்தி பாடல் நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் பிரபல பாடகர்கள் பங்கேற்க உள்ளனர்.

அத்துடன், மேற் குறிப்பிட்ட திகதிகளில் ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தன்சல்கள்  நடத்த ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆண்டு கங்காராம புத்த ரஷ்மி வெசாக் வலயம் மற்றும் பௌத்தாலோக வெசாக் வலயம் ஆகியவை ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகளை மின் விளக்குகளால் ஒளிரச் செய்தல், வெசாக் கூடுகளை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொண்டாட்டங்களின் சிறப்பை அனுபவிக்க பொதுமக்களுக்கு ஜனாதிபதி செயலகம் திறந்த அழைப்பு விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X