2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி திரும்பியதும் முக்கிய மாற்றங்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, மீண்டும் நாட்டுக்குத் திரும்பியதும், முக்கியமான சில பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. 

இதன்படி, நாட்டின் பிரதம நீதியரசராக, தற்போதைய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியால் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தற்போதைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப், அடுத்த மாதத்துடன் ஓய்வுபெற்றதும், புதிய பிரதம நீதியரசராக, ஜயந்த ஜயசூரிய பதவியேற்பார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியுமா என, உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை நாடிய போது, 6 ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என, இவர் வாதாடியிருந்தார். எனினும், 5 ஆண்டுகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என, உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. 

புதிய சட்டமா அதிபராக, தற்போதைய சொலிசிட்டர் ஜெயரல் டப்புல டி லிவேர நியமிக்கப்படவுள்ளார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இவர் இருந்த காலப்பகுதியில், மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இவர் உதவியிருந்தார். 

அதன்போது இவர், அமைச்சர்கள் சிலர் உட்பட, ஐக்கிய தேசியக் கட்சியினரின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தார். 

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரவிநாத ஆரியசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். 

இதுவரை காலமும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக இருந்த, பிரசாத் காரியவசத்தைத் தொடர்ந்தே, புதிய செயலாளராக, ரவிநாத நியமிக்கப்படவுள்ளார்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X