2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் - தேர்தல் ஆணைக்குழு

J.A. George   / 2024 மார்ச் 27 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17 வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இந்த வருடம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

எனினும், பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருந்தால் அது ஜனாதிபதித் தேர்தலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், அதனைத் தொடர்ந்து உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X