2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி, பிரதமரால் அரசியல் சபை நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அரசியல் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சபையில் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால, டிலான் பெரேரா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல் சபையானது நேற்று (28) இரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .