2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் இன்று (07) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறீப்பட்டுள்ளது.

அதன்படி சமல் ராஜபக்‌ஷ சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும், எஸ்.பி திசாநாயக்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் பவித்திராதேவி வன்னியாராச்சி பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமணம் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .