2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘ஜனாதிபதி யாரிடமும் கேட்கத் தேவையில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி  

நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு, ஜனாதிபதி யாரிடமும் கேட்கத் தேவையில்லை எனவும் அரசமைப்பின் பிரகாரம் அதிகாரம் உண்டு எனவும் தெரிவித்துள்ள புதிய அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ஜனாதிபதி, இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் என்றார்.   

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் பூரண அதிகாரம் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதென்பதை, நேற்றைய கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது, சபாநாயகரும்  எற்றுக்கொண்டதையிட்டு தாம் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.   

இன்று (நேற்று) நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே, மேற்கண்டவாறு தாம் தெரிவித்ததாக, மேலும் கூறிய அவர், தொடர்ந்து கருத்துரைக்கையில்,   

“நாடாளுமன்றம், எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அடுத்ததாண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பு இல்லை” என்றார்.   

உத்தியோகப்பூர்வமற்ற வகையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தான் கூட்டியுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.   
இன்றைய ​(நேற்றைய) கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நானும், அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, விஜயதாச ராஜபக்‌ஷ, சரத் அமுனுகம, தினேஸ் குணவர்தன எம்.பியும் பங்கேற்றிருந்தோம் என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .