2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள மேர்வின் சில்வா

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்தர்களுக்காக தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி நாட்டில் பாரிய மாற்றத்தை செய்யவுள்ளதாகவும்  மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சியின் பெயரை பிறகு அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மேர்வின் சில்வா தற்போதைக்கு “வீர துட்டகைமுனு அமைப்பு” என்ற பெயரில் தனது பணிகளை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .