Editorial / 2025 ஜூலை 29 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அளித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தமைக்காக நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி மற்றும் இருவரிடமிருந்து ரூ. 10 பில்லியன் இழப்பீட்டு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரியிருந்தார். எனினும், ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி தனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்து வழக்கை தீர்த்து வைத்தார்.
கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் சந்திம ஜீவந்தரா முன் வழக்கு, செவ்வாய்க்கிழமை தீர்த்து வைக்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 19, அன்று மத்திய கொழும்பில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தவறான அகருத்தால் தனது நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
12 minute ago
21 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
29 minute ago
46 minute ago