Editorial / 2022 ஜனவரி 02 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.ஐ.டி) அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அப்பெண்,
“தன்னுடைய கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகள் அனைத்துக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரியால், பிரதி செய்யப்பட்டுள்ளது” என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை அவமதிப்பது கடுமையான குற்றமாகும். எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாமென தனது அறிவுறுத்தியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தின் ஊடாக ஜனாதிபதி தனது வாகனத்தில் பயணித்த போது, அங்கு பால்மா பக்கெற்றுகளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த மக்கள், ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago