Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 10 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, ஆரியவங்ச திஸாநாயக்க, சிறிதுங்க ஜயசூரிய, வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ, ரொஹான் பல்லேவத்த ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அறிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி, ஐக்கிய தேசியக் முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தவில்லை. எனினும், இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பதற்காக மேலும் பலர் முன்வர காத்திருப்பதாக தகவல் வெளியாகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை, அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago