2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடி; தகவல் தருமாறு கோரிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் அல்லது ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தெரிவித்து மோசடியில் ஈடுபடும் அல்லது மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களால் பாதிக்கப்படவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, 119 என்ற பொலிஸ் அவசர உதவி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .