2024 மே 04, சனிக்கிழமை

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண விபரங்கள் வருகின்றன

Freelancer   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் (24ம் திகதி) நடைபெறவுள்ள பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஜனாதிபதி பங்கேற்ற வெளிநாட்டுப் பயணங்கள், ஒவ்வொரு பயணத்தின் போதும் சந்தித்த வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

மேலும், அவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அந்த உடன்படிக்கைகளை எட்டுவது தொடர்பிலும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் ஜனாதிபதியுடன் பங்குபற்றிய தூதுக்குழுவினருக்கு தனித்தனியாகவும் அதற்காக செலவிடப்பட்ட தொகையையும் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .