2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக்கூற வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் பிரச்சினைகளை கண்டுக்கொள்ளாது மந்தகதியில் செயற்படும் ஆட்சியாளர்களுக்கே புனர்வாழ்வு  அவசியம் என்று, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு  இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு, கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அனுராதப்புர சிறைச்சாலையில், உண்ணாவிரதமிருக்கும் பத்து அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X