2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஜப்பானில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

Niroshini   / 2016 மே 26 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை(26) முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதியையும் தூதுக்குழுவினரையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினர் வரவேற்றனர்.

இதையடுத்து, ஜனாதிபதி தங்கியிருக்கும் நயோகா ஹில்டனில் ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு உற்சவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி, இன்று பிற்பகல் வியட்நாம் பிரதமர் Ngyuyn Xuan Phuc   அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், ஜீ 7 மாநாட்டின் கலந்துரையாடவுள்ள நிரந்தர சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் சௌபாகியம் ஆகிய தலைப்புகளுடன் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.
அதையடுத்து, ஜனாதிபதி ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புக்களின் வர்த்தக அமைப்பின் தலைவர் oyuki IshigeOnomichi Dockyard மற்றும் Onomichi Dockyard நிறுவனத்தின் தலைவர் டகாஷி நகாபே ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு பெருமளவு பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த உச்சி மாநாடு இடம்பெறும் காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .