2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஜப்பானிய பேரரசரை சந்தித்தார் ஜனாதிபதி

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.

டோக்கியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X