2024 மே 11, சனிக்கிழமை

ஜூன் 9 மின் தடையால் ரூ.320 மில்லியன் நட்டம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களால் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட மின் தடையால்,  320 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாகவும் மின் தடை குறித்து விசாரணைகளை நடத்துமாறும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு ஆணைக்குழு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களை குறிப்பிட்ட நாளில் இயக்கியிருக்கக் கூடிய நிலையில், எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு 320 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திட்டமிடப்படாத நடவடிக்கை காரணமாக நீர் உற்பத்தி நிறுத்தப்பட்டமையால், ஜூன் 9 ஆம் திகதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.45 மணி வரை மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை தவறியதாக, கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமலசுரேந்திர, கன்யொன், பழைய லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, மேல் கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்பே, உக்குவெல, மற்றும் போவதென்ன ஆகிய மின் உற்பத்தி நிலையங்களை ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில் செயற்படுத்த மின்சாரசபை தவறியுள்ளதாகவும் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

களனிதிஸ்ஸ மற்றும் யுகதனவி மின் உற்பத்தி நிலையங்களை குறித்த காலப்பகுதியில் செயற்படுத்தியமை காரணமாகவே அவற்றின் செயற்பாட்டுக்கு 320 மில்லியன் செலவாகியுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .