2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஞானசார தேரருக்கு சுகயீனம்

Kanagaraj   / 2016 ஜனவரி 27 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து ஏசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக இருக்கும் நோய்க்கு, அவர் கடந்த சில நாட்களாக குளிசைகளை உட்கொள்ளாமையை அடுத்தே  அவர், திடீரென நோய்வாய்ப்பட்டதாகவும் அதன் பின்னரே அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X