2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்களுக்கு வருகைதந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன்  கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X