2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

டீசல் புகையால் நுரையீரல் புற்றுநோய்

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசல் வாகனங்களிலிருந்து வெயியேறும் விஷப் புகையினால், நுரையீரல் புற்றுநோய் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று, இரத்திரனபுரி பொது வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பிலான நிபுணர் வைத்தியர் சந்தன என். குலதுங்க தெரிவித்தார்.

புகைப்பிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தொற்றா நோய்களுக்கும் குறைவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையினால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய் உருவாகுவதற்கு காரணமாக அமைந்துள்ள என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால், நகரங்கள் மற்றும் பிரதான வீதிகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் நகர பாடசாலைகளைச்சேர்ந்த பிள்ளைகள் நுரையீரல் நோய்களுக்கு உள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X