2025 மே 03, சனிக்கிழமை

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகள் அதிகரிப்பு

Freelancer   / 2025 மே 03 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார்.

காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த இரண்டு நோய்களும் ஒரே நுளம்பால் பரவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் 50% மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X