2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

டாசன் பங்களாவை விற்பது குறித்து கேள்வி

Simrith   / 2024 மே 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க டாசன் பங்களாவை விற்கும் நடவடிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

"பங்களாவை விற்கும் நடவடிக்கை குறித்து அந்த பங்களாவின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இன்றுவரை தங்கள் கருத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்" என்று எம்.பி. கூறினார்.

"ஒரு காலத்தில் கொழும்பு கண்டி வீதியை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய பிரித்தானியர் டாவ்சனின் வசிப்பிடமாக இருந்ததால் இந்த பங்களா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" என்று அவர் கூறினார்.

இந்த பங்களாவை விற்பனை செய்வதற்கு பதிலாக அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹாசிம் யோசனை தெரிவித்துள்ளார். இந்த பங்களா தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X