2025 மே 03, சனிக்கிழமை

டில்லியில் கடும் மழை: குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Freelancer   / 2025 மே 03 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டில்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மூன்று குழந்தைகள்  உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, வீதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்,

நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மீட்பு பணிகளுக்காக பல குழுக்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் சென்றோம். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர் என தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.

டில்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதையும், வீதியில் தேங்கிய நீரினால் மக்கள் சிக்கித் தவிப்பதையும் காட்டும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. மின்டோ வீதியில் பாதியளவு மழைநீரில் மூழ்கிய கார் ஒன்றின் காணொளி  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X