Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 நவம்பர் 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக அறிந்துக்கொண்ட, அநுராதபுரம் அலையாபத்து பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியை , இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி , பாடசாலைக்கு வராமல் இளைஞனொருவனுடன் சென்றுவிட்டு மறுநாள் பாடசாலைக்கு வந்ததாக அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“டிக் டொக்” இணையத்தளம் ஊடாக அறிந்துக்கொண்ட இளைஞனுடன் மாணவி காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் , அவருடைய நிர்வாண புகைப்படங்களையும் இளைஞனுக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் குறித்த புகைப்படங்களை முகப்புத்தகத்திற்கு வெளியிடுவதாக கூறி அச்சுறுத்திய இளைஞன் மாணவியை, குருநாகல் பகுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago