2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகவும்’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்றும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், இவ்வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் ப​டி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 49,132 ஆகுமென்றும், ​அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதம் 7,278 பேர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, இம்மாதம் 3,127 டெங்கு நோயளர்களும் பதிவாகியுள்ளதோடு, வடக்கில் நிலவும் மோசமான வானிலையால் டெங்கு நோய் அபாயம் குறித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் 1,500 பேரை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .