2025 ஜூலை 03, வியாழக்கிழமை

டெல்லியில் பயங்கர தீ விபத்து; 32 பேர் உயிரிழப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், டெல்லியில் உள்ள ஜான்சி ராணி சாலையில் அமைந்துள்ள தனாஜ் மண்டியில் இன்று (08) அதிகாலை தீ பற்றியது. தீ மளமளவென பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தகவலறிந்து 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .