2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய பொறிமுறை தொடர்பில் ஜூனில் வாய்வழி அறிக்கை

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், தீர்வை தேடுவதற்காக இலங்கையின் தேசிய பொறிமுறைக்கு ஆதரவளிக்கின்ற யோசனையை செயன்முறை படுத்துவது தொடர்பிலான வாய்மூல அறிக்கை அடுத்தவரும் ஜூன் மாதம் சமர்ப்பிக்கவேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் ஜூனில் நடைபெறும் இதன்போதே இந்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். இதேவேளை, முழுமையான அறிக்கையை இலங்கை அரசாங்கம் 2017ஆம் ஆண்டு நடைபெறும் 34ஆவது கூட்டத்தின் போது சமர்பிக்கவேண்டும்.

இந்த யோசனையை நிறைவேற்றுவதற்கு மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளும் ஆதரவளித்தன.

இலங்கைக்கு எதிராக இதற்கு முன்னர் இருந்த நாடுகளும், இம்முறை, இலங்கைக்கு ஆதரவாக இருந்தமை விசேட அம்சமாகும்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்பு மற்றும் மனித உரிமை மேம்படுத்தல், ஆகிய தொனிபொருளில் அமெரிக்காவினால் முன்வைத்த யோசனைக்கு பிரிதானியா, மெசிடோனியா மற்றும் மொன்டினிகிரோ உள்ளிட்ட 25 நாடுகள் இணை அனுசரனையளித்தது.

இந்த யோசனையின் முதலாவது சரத்துக்களில் சில, உப-பிரிவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியதை அடுத்து, உப-பிரிவுகள் சில இறுதியோசனையில் திருத்தப்பட்டது.

இந்த நாட்டின் ஊடகவியலாளர்கள், நபர்கள் காணாமல் போனமை, பல்வேறான சமய பிரதிநிகளை கொண்ட குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இடைஞ்சல்கள், தாக்குதல் தொடர்பில் உரிய முறையிலான விசாரணை, அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான பொறிமுறைகள் ஆகியனவும் அந்த சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அதேபோல, இது தொடர்பில் ஆரம்பிக்கப்படும் உள்நாட்டு பொறிமுறையில் பொதுநலவாய அமைப்பு உள்ளிட்ட நீதிபதிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X