2025 மே 19, திங்கட்கிழமை

தாஜூதீனின் அலைபேசியின் நினைவகப் பகுதி மீட்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் அலைபேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், அலைபேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை திங்கட்கிழமை (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

அலைப்பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜூதீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை செய்யப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் அலைபேசியின்; தகவல்களை ஆய்வுக்குட்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு நடத்தி அது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை,பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில், புதிதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவுக்கமைய திங்கட்கிழமை (05) புதிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X