Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் முக்கியஸ்தர்களில் சிலர், மிக விரைவிலேயே சிக்குவர் என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனம் யாருடையது, பிரதான சந்தேகநபரான சாரதி, யாருடைய சாரதியாகக் கடமையாற்றிவர் என சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது. இக்குறுகிய காலததிற்குள் நாம் நாட்டில் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
குறுகிய காலத்துக்குள் 19ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தி, ஜனாதிபதியின் பிரதான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10 சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மிகவிரைவில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றவுள்ளது.
மேலும், நாட்டில் தற்போது மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் பூரணமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பெற்றோர்கள் நிம்மதியாக உறங்கும் நிலைமையும் முஸ்லிம்கள் சுதந்திரமாக தமது மத வழிபாடுகளில் ஈடுபடவும் உணவு முறைகளை விரும்பியபடி மேற்கொள்ளவும் நல்லாட்சி அரசாங்கமே வழிசமைத்தது என்றார்.
பிரபல றகர் வீரர் வசீம் தாஜூதினின் படுகொலை தொடர்பான விசாரணை, மிகவிரைவிலேயே முடிவடையவுள்ளது. விசாரணைகள் நிறைவடைந்ததும் முக்கிய புள்ளிகள் சிலர் கைதுசெய்யப்படுவர் என்றார். அதுமட்டுமன்றி நல்லாட்சி பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
43 minute ago