2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ இன்னும் முடிவில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முடிவெதனையும் எடுக்கவில்லையென, அதன் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தீர்மானத்துக்கமையவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே, தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியல் நிலவரப்படி, அரசியல் நபர்களின் அடிப்படையில், எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாது என அவர் தெரிவித்தார்.

தங்களால் எடுக்கப்படும் முடிவு, கொள்கை அடிப்படையிலேயே எடுக்கப்படும் என்றும் நாட்டில், பல முக்கியமான விடயங்கள் நடைபெறவேண்டியுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி முடிவெடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தற்போது, தன்னால் எந்தவொரு முடிவையும் உறுதியாக் கூற முடியாது என்றும் தனிக்கட்சிகளைப் பற்றி தான் சிந்திக்கவில்லை என்றும், சரியான அவதானம் செலுத்தப்பட்டதன் பின்னரே, முடிவு பற்றி அறிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதன் முடிவு, நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் முக்கியமான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .