2025 மே 15, வியாழக்கிழமை

தேனீ நோய்

Gavitha   / 2015 ஜூலை 27 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதன்முதலாகப் தேன்பூச்சி நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய நிபுணரும் விரிவுரையாளருமான டாக்டர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார்.

தேனீக்கள் அடிக்கடி இறந்து வருவதாகவும் அதனால், தேனீக்களின் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ளதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேன் விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும் தங்கொல்ல கூறினார்.

இது தொடர்பில் ஆராய்ந்த போதே தேன்பூச்சி நோய் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதனால், இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேனை நிறுத்திவிட்டு இலங்கையிலேயே அதனை உற்பத்தி செய்வதற்கான முயற்சி தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது, அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவௌ மற்றும் ஹபரண ஆகிய பிரதேசங்களில் இந்த தேன்பூச்சி நோய் பரவி வருவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நோய்வாய்ப்பட்டுள்ள தேனீக்கள் தொடர்பில் தற்போது சோதனை நடத்தி வருவதாகவும் தேவைப்படம் பட்சத்தில் வெளிநாட்டு உதவியை நாடவுள்ளதாகவும் டாக்டர் அசோக்க தங்கொல்ல கூறினார்.

இதேவேளை, தேனீக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய், ஏனைய பூச்சி இனங்களையும் தாக்கக்கூடியதாக உள்ளதெனவும் எவ்வாறாயினும், சந்தையிலுள்ள தேன்களை கொள்வனவு செய்வதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .