Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் ஜெப் டொஜ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பொறுப்புகூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் அக்கறையுடன் இருப்பதாக கூறிய உயர் ஸ்தானிகர், தென்னாபிரிக்க அரசானது, இந்த விடயம் தொடர்பில் எந்த வேளையிலும் தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார் .
நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் இலங்கைக்கு அவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .