2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தும்புத்தடியால் அடித்த அதிபருக்குப் பிணை

Thipaan   / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அதிபரின் அறைக்கு சென்ற ஆசிரியையைத் தும்புத்தடியால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறை மஹாநாம வித்தியாலயத்தின் அதிபர் யமுனா நயனா காந்தி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு, நீதவான் சந்திம லியனகே அனுமதியளித்தார்.

அதுமட்டுமன்றி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்குச் சமுகமளித்து கைச்சாத்திடவேண்டும் என்றும் நீதவான் கட்டளையிட்டார்.

இவ்வழக்கு தொடர்பிலான இருதரப்பினரும் இணங்கிச்செல்வதற்கு முடிவெடுத்தால், வைத்திய அறிக்கையுடன் ஜூன் மாதம் 13ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தில், ஆசிரியையின் பிள்ளையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X