2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருடச் சென்ற இடத்தில் சிக்கிய நபர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிடிய, அங்காடியொன்றில் திருடச் சென்ற நபரொருவர், இராக்கைக்கும் சுவருக்குமிடையில் சிக்கிக்கொண்டமையினால் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.  

குறித்த நபர், அங்காடியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, சுமார் 8 மணி நேரம் வெளியேற முடியாமல் போராடியுள்ளதாகவும் பின்னர் பெரிய பெட்டியொன்றில் மறைந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், பலசரக்குக் கடைகளில் கொரக்கா, கராம்பு, ஏலக்காய், முந்திரி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இவர் இதற்கு முன்னர் குறித்த அங்காடியில் 18 தடவைகள் திருடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X