Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டுக் கொடுப்பனவு உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, துறைமுகத் தொழிலாளர் சங்கத்தினால் கடந்த ஐந்து தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலைப் போராட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உறுதிமொழியை அடுத்து, நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைவிடப்பட்டது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்தது.
தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கொழும்புத் துறைமுக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய புத்தாண்டுக் கொடுப்பனவை வழங்குமாறு துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு, பிரதமர் அறிவுறுத்தியதை அடுத்தே, மேற்படி போராட்டம் கைவிடப்பட்டது.
30 ஆயிரம் ரூபாய் புத்தாண்டுக் கொடுப்பனவை, 4,500 ரூபாயாகக் குறைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய சேவைச் சங்கம் மற்றும் சுதந்திர சேவைச் சங்கம் உட்பட கொழும்புத் துறைமுகத்தில் செயற்படும் 17 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .