2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

திறன்பேசிகளை திருடிய குற்றச்சாட்டில் மாணவன் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய திறன்பேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய மாணவனும் 30 வயதுடைய நபரொருவரும், அம்பலாங்கொட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொட பிரதேசத்திலுள்ள அலைபேசிக் கடையொன்றிலிருந்து திறன்பேசிகளை (smart phones) திருடியதாகக்  கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்ட போது, 65,000 ரூபாய் பணம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் குறித்த 16 வயதுடைய மாணவன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறின் அடிப்படையில் அளுத்கமவிலுள்ள பிரபல பாடசாலையில் இணைந்து கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .